Monday, 27 February 2017

வழிபாடு


    சிவ சிவ
     நட்சத்திரங்களையும் , உருத்திராக்கங்களின் முக எண்ணிக்கையையும் தொடர்பு படுத்தி , வந்த ஆதாரமற்றப் பதிவும் , தொடர்ந்து கோமல் விளக்கமும்
&&&&&&&&&&&&&&&&&&&
[21/05, 9:14 PM] கோமல் கா சேகர்: எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்

1. அஸ்வினி - ஒன்பது முகம்.
2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி - இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.
6. திருவாதிரை - எட்டு முகம்.
7. புனர்பூசம் - ஐந்து முகம்.
8. பூசம் - ஏழு முகம்.
9. ஆயில்யம் - நான்கு முகம்.
10. மகம் - ஒன்பது முகம்.
11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் - பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் - இரண்டு முகம்.
14. சித்திரை - மூன்று முகம்.
15. ஸ்வாதி - எட்டு முகம்.
16. விசாகம் - ஐந்து முகம்.
17. அனுஷம் - ஏழு முகம்.
18. கேட்டை - நான்கு முகம்.
19. மூலம் - ஒன்பது முகம்.
20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.
22. திருவோணம் - இரண்டு முகம்.
23. அவிட்டம் - மூன்று முகம்.
24. சதயம் - எட்டு முகம்.
25. பூரட்டாதி - ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி - ஏழு முகம்.
27. ரேவதி - நான்கு முகம்

அந்தந்த  நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்து பயன் பெறுங்கள்🙏
[21/05, 9:15 PM] கோமல் கா சேகர்: &&&&&&&&&&&&&&&&&
      இப் பதிவின் மீது கோமல் விளக்கம்
[21/05, 9:16 PM] கோமல் கா சேகர்: ௐௐௐௐௐௐௐௐௐ
              சிவ சிவ !
    எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தனை முகம் உள்ள உருத்திராக்கம் அணிய வேண்டும் என இப்படிப் பட்டக் கருத்துத் தொகுப்பினைப் பதிவு செய்வோர் உயரிய நூல் ஆதாரம் தெரிவிக்க வேண்டும்  !
      நூல் ஆதாரம் இல்லாத ஆன்மீகச் செய்திகளை ,
எவரெவரோ அனுப்புவதை எல்லாம் பகிர்தலை அறவே தவிர்க்க வேண்டும் !
     இறைவன் திருவருளால்
முதலில் நம் கையில் எத்தனை முகங் கொண்ட உருத்திராக்கம் வந்து சேர்கிறதோ அதை அணிவதே சிறப்பு !
      ஐந்து முக உருத்திராக்கமே இயல்பானத் தோற்ற முறையில் , இறைவனே அதிக அளவில் படைத்திருப்பதால் அதனையே சிறப்பாகக் கொண்டு அணிதலே நன்று !
    இவை திருவைந்தெழுத்தைப் பிரதிபலிப்பதாகவும்  கொள்ளுதலே நலம் !
      உதாரணமாக திருஞான சம்பந்தப் பெருமான் ஐவகை படைப்புப் பொருள்களை
திருவைந்தெழுத்துடன் இணைத்து நோக்கி அருளியிருப்பதை சிந்தித்து உணர்க !

  கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து ,அகத்து /அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில் /தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை /அங் கையில் ஐவிரல் அஞ்சு எழுத்துமே ~ 03-22-05
     முதலில் இப்படிப்பட்ட செய்திகளைப் பரவ விட்டு நம்பச் செய்வதும் , தொடர்ந்து அசல் விலையை விட 100 மடங்குக்கு மேல் விலை வைத்து ,அனுப்பும் செலவு
இலவசம் எனத் தம் பெருந் தன்மையைக் காட்டி விளம்பரப் படுத்தி ஏமாற்றுவதும் தொடரும் !
     சிவத்தைத் தவிர இறைவனே இல்லை என்று உறுதி கொண்டு ,
பயணிப்பவர்கள் , கோள்களாலும் ,
நட்சத்திரங்களாலும், சிவத்தின் பணியை ஏற்று நடத்தும் பிற தெய்வங்கள் உட்பட ,அனைவராலும் நல் ஆசி வழங்கப்படுவர்! 
       இவர்கள் துன்பமே இல்லா இன்ப வாழ்வு வாழ்வர் என அருளாளர்கள் வழி சிவமே உணர்த்தியக் மெய் வாக்குகளைப் பல முறைஆதாரங்களை எடுத்துக்
காட்டியும் கருத்தில் கொள்ளாமல் , கோள்களை , அவைகளே ,இவர் சிவனடியார் என்று அஞ்சி விலகினாலும் , பற்றிப் பிடித்துக் கொண்டு விடாதவர்களை இறைவனே தெளிவித்துக் காத்தால் தான் உண்டு போலும்!
 பெருமாள் கோவில்களில் ஏன் சிவன் இருப்பதில்லை வாரியார் தந்த அற்புதமான விளக்கம்

ஒரு கூட்டத்தில் ஒரு அம்மா வாரியாரிடம்," ஐயா நான் பெரும்பாலும் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதியை பார்த்து இருக்கிறேன். ஆனால், ஏன் பெருமாள் கோயில்களில் சிவனின் சந்நிதி இருப்பதில்லை?" என்று கேட்டார்கள்.

அதற்கு வாரியார் திருப்பிக் கேட்டார்," அம்மா! அண்டாக்குள்ள, குண்டா போகுமா, குண்டாக்குள்ள அண்டா போகுமா?" என்று அந்த அம்மா சிறிது நேரம் யோசித்த பிறகு," சுவாமி எனக்குத் தெரிந்தவரை அண்டா தான் பெரிது. அதனால் அண்டாக்குள்ள தான் குண்டா போகும்" என்றார்கள்.

உடனே வாரியார் சிரித்துக் கொண்டே சொன்னார், " அது போலத் தான் அம்மா சிவன். அவர் அண்டா. நாராயணன் குண்டா. அதனால் தான் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நிதி இருப்பதில்லை . ஆனால் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதி உள்ளது" என்று.

எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்களேன்!

**********************************************



#நமச்சிவாய_வாழ்க..

#சிவ_பக்தன்_என்றால்_யார்?

#சிவனடியார்_என்றால்_யார்?

இவ்விரண்டுமே ஒன்றுபோல தான் தெரியும்.
ஆனால் சிவபக்தனுக்கும் சிவனடியாருக்கும்
சில வேறுபாடுகள் உள்ளன.
என்பதை உணர்ந்ததுண்டா!!!!!!! வாருங்கள்
உணரலாம்...........

1)சிவனை கண்டதும் பனிபவன் பக்தன். சிவனுக்காக
எதையும் செய்ய துனிந்தவன் அடியார்.

2)சிவனை வணங்குபவர் பக்தன்.
சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.

3)உடல் தூய்மையாக இருந்தால்
மட்டுமே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.
உடலை ஒரு பொருட்டாக கருதாமல்,
மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.

4)அர்சனை செய்வதற்காக கோயில் செல்பவர் பக்தன்.
ஈசனை போற்றி பாடி அனந்தமடைய கோயில்
செல்பவர் அடியார்.

5)அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.

6)மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர்
ஈசன் என்று நினைப்பவர் பக்தன். ஈசனை அடைய
மனமும் மொழியும் தடையில்லை, ஆக
மறையும் முறையும்
எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.

7)கூட்டத்தோடு கூட்டமாக
இறைவனை காண்பவர் பக்தன். கூட்டம் போனபின்
ஈசனழகை தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.

8)ஈசனை அடைய சுத்தமாக இருக்கவேண்டும் 
என நினைப்பவர் பக்தன். சுத்தத்தை பெரிதாக எண்ணாமல்  சித்தத்தை 
சிவன்பால் வைப்பவர் அடியார்.

9)வாழ்வில்
ஒரு பகுதியை வழிபாடுக்கு செலவு செய்பவர்
பக்தன். வாழ்வையே வழிபாடாக கொண்டவர்
அடியார்.

சிவபக்தனாக இருப்பதைவிட சிவனடியாராக
இருப்பதுதான் மிக மிக சுலபம்.
சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம்.
சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்.🙏🏻🙏🏻🙏🏻திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🏻🙏🏻அருள்தரும் சிவகாமி அம்மை உடனமர்ந்த ஆனந்தமா நடராஜ பெருமான் திருவடிகள் போற்றி போற்றி

*************************************

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள

(1)       முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2)        புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3)        வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4)        கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5)       வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6)        வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)       அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)        செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

(9)          7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

(10)         வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

(11)         ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

(12)         படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

(13)        வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

(14)         உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

(15)          உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்

(16)          சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

(17)           வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்

(18)            கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:
                   வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று

(19)            சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:
                   ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்

(20)            கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்....

வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
என்றும் இறைப்பணியில்
ஆனந்த் தயாளன் B.com


என்றும் அன்புடன்,

எம்.சரவணக்குமார்@எஸ்.கே
<எஸ்.கே>தமிழ் இணையம்™
மதுரை👈🇮🇳🚀🌍
வாட்ஸ் ஆப் எண்
9842171532🌺🌻🌹🌼
முகநூல்: SMS KING SK

******************************************************

வீட்டு பூஜை குறிப்புகள் - 80
செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் ...

1.           தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கட...வுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2.           தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3.         நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4.         வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5.        சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6.        செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7.       நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8.      அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9.      அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10.     பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11.     பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12.     கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13.     சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14.    வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15.    வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16.    அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17.    நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18.    ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19.   விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20.   ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21.   வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22.   சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23.   ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24.   நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25.   யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற
வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26.   பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27.   பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28.   பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29.   விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30.   ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31.   ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம்.

32.  சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை
அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை
தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குகளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
*****************************************
உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா?

                வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி பொருள்கள் இருப்பதே வீட்டில் செல்வம் நிலைக்காமலே செல்ல காரணம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது 

                           நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும். வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

         
வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்குகிறது.

         
உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது. இவைகள் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும்.

       
முள்கள் இருக்கும் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

       நமது வீட்டில் பயன்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விடாமல் அதை வெளியில் போட்டு விட வேண்டும். ஏனெனில் அந்த கடிகாரமானது நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கச் செய்கிறது

கோயிலில் உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அதற்கு என்ன அர்த்தம்

தேங்காயில் உள்ள மூன்று கண்களில்,

முதல் கண் - பிரம்மன்

2 வது கண்  - லட்சுமி

3 வது கண்  - சிவன் என்று நம்பப்படுகிறது.

பூஜையில் வைக்கப்படும் தேங்காய் உடைக்கப்படும்போது அழுகியிருப்பது, கோணலாக உடைவது, பூ விழுவது, கொப்பரையாக இருப்பது போன்றவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமுண்டு. அவை நமக்கு வரப்போகும் நன்மை, தீமைகளை வெளிப்படுத்தும்.
தேங்காய் அழுகியிருந்தால் நமக்கு மனவருத்தம் உண்டாகிறது. அபசகுணமாகக் கருதுகிறோம். ஆனால் அப்படி அழுகியிருப்பது மிக நல்ல சகுணம் என்றே கூறப்படுகிறது. அப்படி அழுகியிருந்தால் அதுவரையிலும் இருந்த கண் திருஷ்டி விலகிப் போவதாகவும், இதுவரை அண்டியிருந்த பீஐட, கெட்ட சக்தி விலகிப் போகும்.
உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் பணவரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம், லாபம் ஆகியவை உண்டாகும்.
தேங்காய் கொப்பரையாக இருந்தால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.     சிவனடியான் வடிவேலன்.
********************************************

சிறப்பு தரும் சிவ வழிபாடுகள்

சித்ரா பலவேசம்

* சித்திரை மாதம், சித்திரை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

* வைகாசி மாதம், விசாக நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் பிறப்பறுத்த நிலை பெறலாம்.

* ஆனி மாதம், மூலம் நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் முயற்சி செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.

* ஆடி மாதம், உத்திராட நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கிப் பல புண்ணியங்கள் கிடைக்கும்.

* ஆவணி மாதம், அவிட்டம் நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும்.

* புரட்டாசி மாதம், உத்திராடம் நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களையும் பெற முடியும்.

* ஐப்பசி மாதம், அசுவினி நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் நினைத்தவைகள் நிறைவேறும்.

* கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் ராஜ போக வாழ்க்கை கிடைக்கும்.

* மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் வந்து சேரும்.

* தை மாதம், பூசம் நட்சத்திர நாளில் சிவபெருமானைத் தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும்.

* மாசி மாத மக நட்சத்திர நாளில் பஞ்சவர்ண ஆடையினைச் சார்த்திச் சிவபெருமானை வழிபட்டால் சிவ தீட்சை கிடைக்கும்.

* பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் மஞ்சள் ஆடையைச் சார்த்திச் சிவபெருமானை வழிபட்டால் புண்ணியங்கள் வந்து சேரும்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்              

            வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

            கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சனை செய்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

            ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர செல்வம் பெருகும்.

             சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

             நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

             குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

             வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

              யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீட்சம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

             அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. காலைப் பொழுதில் பூஜை செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

             அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்   .          

பணத்தை அள்ளித் தரும் பதிகம்!

சுந்தரர் “திருஓணகாந்தன் தளி” திருத்தலத்தில் இறைவனை நோக்கிப் பாடிய பாடல் இது! இப்பதிகத்தில் உள்ள பத்துப் பாடல்களையும் பாடிட,பொன்னும் பொருளும் கிட்டிடும்;

இப்பதிகத்தை முழு நம்பிக்கையுடன் தினமும் வாசித்துவர,உங்களது வறுமை நீங்கி, பொன்னும் பொருளும் கிட்டி,உங்களுக்கு நல்ல வாழ்வு அமைந்திடும்;

பதிகம் ஜபிக்க ஆரம்பித்த சில நாட்களுக்கு மட்டும் தான் ஜபம் சிரமமாக இருக்கும்;சில வாரங்களில் மனப்பாடம் ஆகிவிடும்;அப்புறம் எப்போது வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;

இப்பதிகத்தை ஒருமுறை எழுதி வைத்து,அதை தினமும் ஜபிக்க வேண்டும்;வீட்டிலும் ஜபிக்கலாம்;சிவாலயத்திலும் ஜபிக்கலாம்;

திருச்சிற்றம்பலம்

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தல் பூசனை செய்யல் உற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லை
கழலடி தொழுதுய்யின் அல்லால்
ஐவர்கொண் டிங்காட்ட ஆடி
ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யும் ஆறு ஒன்றருளிச் செய்யீர்
ஓணகாந்தன் தளி உளீரே

திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கோற்றட்டியாளார்
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம்
ஓணகாந்தன் தளி உளீரே

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணியும் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்றிலர் என்றிரங்கி
மதி உடையவர் செய்கை செய்வீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆபற் காலத்தடிகேள் உம்மை
ஒற்றிவைத் திங்குண்ணலாமோ
ஓணகாந்தன் தளி உளீரே

வல்லது எல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய் திறந்தொன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பதென்னீர்
பல்லை உக்க படுதலையில்
பகல் எலாம் போய்ப் பலி திரிந்திங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன் தளி உளீரே

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறை படாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கு
அன்புடையவர்க்கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த்தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஒடிப் போகீர் பற்றும் தாரீர்
ஓணகாந்தன் தளி உளீரே

வார் இருங்குழல் வாள் நெடுங்கண்
மலைமகள் மது விம்மு கொன்றைத்
தார் இரும் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊர் இடும் பிச்சை கொள்வதென்னே
ஓணகாந்தன் தளி உளீரே

பொய்ம்மையாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்றிடவுங்கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதும் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை யன்றே எம்பெருமான்
ஓணகாந்தன் தளி உளீரே

வலையம் வைத்த கூற்றம் மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தையாலே
திருவடி தொழுதுய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவரூடை
உலை அமைத்திங்கொன்ற மாட்டேன்
ஓணகாந்தன் தளி உளீரே

வாரம் ஆகித் திருவடிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவதென்னே
ஆரம் பாம்பு வாழ்வதாரூர்
ஒற்றியூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கையாளைச்
சடையில் வைத்த அடிகேள் உம்தம்
ஊரும் காடும் உடையும் தோலே
ஓணகாந்தன் தளி உளீரே

ஓவணமேல் எருதொன்றேறும்
ஓணகாந்தன் தளியுளார்தாம்
ஆவணம் செய்தாளுங் கொண்ட
வரை துகிலொடு பட்டு வீக்கிக்
கோவண மேற்கொண்ட வேடம்
கோவையாக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்
பறையும் தாம் செய்த பாவம் தானே!

திருச்சிற்றம்பலம்

****************************************

சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்!

சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான்

ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களு ம்கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடுசெய் வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்ப தாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப் பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன் , ‘கிரகபதம்’ என்னும்பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இரு ந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாத ப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியி ன் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவ ராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் கார ணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.

சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும்உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில்ள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாக மும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத் தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடையதேரில் 4 பட்டணங்களைசுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமா னது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழை க்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் 7 என பொருள். அமாவாசைக்கு பிறகான 7- வது நாள் சப்தமி திதி ஆகும். உத்தி ராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாத மானதை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரதசப்தமி என்று போற்ற ப்படுகிறது.

அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்கு கின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராடவேண்டும். 7 எருக்கம் இலைக ள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண் கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.

இந்த 7 எருக்கம் இலைகளையும், கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டைகளில் 2, தலையில் ஒன்று என்று பிரித்து வை த்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொ ண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழ ந்த பெண்கள், 7எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடி ப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி விரதத் தை சூரியஉதயத்தில் செய்யவேண்டும். ரத சப்தமியன் று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத் தில் சூரியரதம் வரையவேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அத ற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற் றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரு ம். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரை ந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் ...