சீந்தனை

எழுத்தாளர் சுஜாதா இளைஞர்களுக்குச் சொன்ன  10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.

 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும்  மதிய ஷோ  போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண  வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்டதலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.

6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித  மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு  முக்கியம்.

8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.

10. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில்  நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.

இந்த 10ல் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான் பாருங்களேன்...
*********************************************

உறவு என்பது ஒரு கோவில்
                உறவு என்பது ஒரு கோவில்.அதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை கழட்டிவைத்தல் நல்லது.
                
               படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!  
                 
              மனைவியை மறக்க வைக்கும் தாயின் பாசத்தையும், தாயை நினைக்க வைக்கும் மனைவியின் அன்பையும் பெற்றவன் அதிர்ஷ்டசாலி...                      
வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!      

             அம்மாவின் அன்பு தோசை மாதிரி.. அப்பாவின் அன்பு தோசைக்கல் மாதிரி..!தோசையின் ருசி தெரியும்.. தோசைக்கல்லின் தியாகம் தெரியாது..!    
                
             அன்பான உறவுடன் சண்டை என்றால், அந்த நொடியில் இருந்து அவர்களைத் தவிர வேறெதைப்பற்றியும் மனது நினைப்பதில்லை..!  
                  
             அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்.                      

             அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு..                      
 

*********************************************

கோடிகள் குவிந்தாலும் ஆப்பிள் நிறுவனர்

ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்
"நான் வணிகவுலகில்
வெற்றியின் உச்சத்தைத்
தொட்டிருக்கிறேன்.
பிறரின் பார்வையில்
என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.
எப்படியிருந்தாலும்
என்னுடைய பணிச்சுமைகளை
எல்லாம் தாண்டி
நானும் என் வாழ்க்கையில்
ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச்  சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில்தான்
அறிந்துகொண்டேன்.
இதோ !  இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு
என் முழுவாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு  எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.
இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக - மிகஅருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்  சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ,
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.
அவைதான் வாழ்வில்
மிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.
அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக்  கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,
என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்  இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்,
பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும்
வெறும்  மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.

நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.

எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை - உச்சத்தைத்  தொட முயலுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும்தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்
மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து,
அதைப் பணத்தால்
வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,
இப்போதாவது வாழ்க்கையை
வாழத் தொடங்குங்கள்.

நாம் நடித்துக்கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும்  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்"
*******************************

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..                    

வாழ்வின் எதார்த்தம்

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறிவெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்உடனே தகவல் சென்றுவிடும்,

🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,எல்லாம் நேரம்!

🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டுஅழுவார்கள், வருகின்ற நண்பர்களையும்உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும்என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

🌴பாவம் எல்லோரும்tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

🌴இதோ நாம் எதிர்பார்த்தஅந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfireம் போட்டுவிட்டார்கள்.

🌴விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,

🌴சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்தபாசத்தையெல்லாம்எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை

🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான்,'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும்செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம்மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள்இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!

🌴என்ன பண்றதுபொணமா பொறந்தாலே இப்படிதான்!ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும்அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம்கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்சேர்ந்தே புதைந்து போகின்றன!

🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!

🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்றஎந்த உத்திரவாதமும் இல்லாதபோதுநாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

🌴அர்த்தமுள்ளவாழ்க்கையை வாழ்வோம்.

*******************************************

👤 கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:

😬ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000
❤மாற்று இதயம் பொறுத்த - ரூ 11/2 கோடி
💙செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்
🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )
👰செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்
🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்
👬செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்
👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000
🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000
🙇கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000
💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000
🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000
🌡இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை. 

🍷🍾🍺🚬💊🛌🏍🚕 கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.

💰💷💶 கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.



****************************************



****************************************

உறவு என்பது ஒரு கோவில்.
அதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை கழட்டிவைத்தல் நல்லது.                      

 படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!                      

 மனைவியை மறக்க வைக்கும் தாயின் பாசத்தையும், தாயை நினைக்க வைக்கும் மனைவியின் அன்பையும் பெற்றவன் அதிர்ஷ்டசாலி...                      

வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!                      

அம்மாவின் அன்பு தோசை மாதிரி.. அப்பாவின் அன்பு தோசைக்கல் மாதிரி..!
தோசையின் ருசி தெரியும்.. தோசைக்கல்லின் தியாகம் தெரியாது..!                      
அன்பான உறவுடன் சண்டை என்றால், அந்த நொடியில் இருந்து அவர்களைத் தவிர வேறெதைப்பற்றியும் மனது நினைப்பதில்லை..!                      
அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்.                      

அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு..                                        

புலிக்கு முன்னால போன மானும், பொண்ணுங்க பின்னால போன ஆணும் பொலச்சதா சரித்திரிமே இல்ல..!!                      

தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்..                      

என்ன கொடுமை... காதலர் தினம் இருப்பதால் தானோ என்னவோ தெரியவில்லை பிப்ரவரி மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..!!                      

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.. பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..! ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!                      

வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.                      

எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!                      


மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது "காப்பு".. அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!!

No comments: