#இளமையை #மீட்டுத்தரும் #திராட்சை #பழம்
#திராட்சை #நினைக்கும்போதே #இனிக்கும் #பழங்களில் #ஒன்று_இவற்றில்_கறுப்புத்
#திராட்சை_பச்சைத்_திராட்சை_பன்னீர்த்
திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.
திராட்சை பழத்தின் சத்துக்கள்:
நீர் =85%
கொழுப்பு =7%
மாவுப்பொருள் =10%
புரதம் =0.8%
கால்சியம் =0.03%
பாஸ்பரஸ் =0.02%
இரும்புச்சத்து =0.04%
விட்டமின் A =15%
நியாசின் =0.3%
மருத்துவக் குணங்கள்:
திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.
அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".
திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.
இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.
திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!
ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம்
தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை"டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.
"ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!
உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது
பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது.
எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ
உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்:
ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம்,மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.
பளிச் முகத்திற்கு:
தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
வெண்மையான பற்கள்:
திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது.
முகச்சுருக்கம் போக்கும்:
திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.
********************************************
சதை பலமாக, சக்கரை குணமாக உட்கட்டாசனா.
அனுபவம் வாய்ந்த ஒரு யோகா ஆசிரியர் முதல் யோகாவாக உட்கட்டாசனா யோகாவை தான் கற்று தருவார். Chair Pose, Fierce Pose, Hazardous Pose, Lightning Bolt Pose, Wild Pose என இதற்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அணைத்து யோகாக்களுக்கும். இந்த உட்கட்டாசனாவே அடிப்படை.
இந்த யோகாவில் அப்படி என்ன? இருக்கிறது. உங்கள் தொடையில் உள்ள சதைகள் குலுங்கினால் அந்த அனுபவம் எப்படி? இருக்கும். உங்கள் தொடை என்றாவது குலுங்கி இருக்கிறதா? இந்த உட்கட்டாசனாவை நீங்கள் தினமும் செய்தால். உங்கள் தொடை குலுங்குவதை, நடுங்குவதை, அதிர்வதை நீங்கள் உணரலாம். இந்த யோகாவை எவ்வாறு? செய்ய வேண்டும். இதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன? என்பதை பார்ப்போம்.
உட்கட்டாசனாவை எவ்வாறு? செய்வது.
தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். குனிய கூடாது. உடம்பை மட்டுமே முன்பக்கமாக லேசாக வளைக்க வேண்டும். கால்கள் இரண்டையும் 90 டிகிரி ஆங்கிளில் விரித்து. முட்டுக்களை மடக்கி. நாற்காலியில் அமர்வதை போல் அமர்ந்து இந்த யோகாவை செய்ய வேண்டும்.
உட்கட்டாசன பலன்கள்- பஞ்சு தலைகாணியை நீங்கள் வேகமாக குத்தினால் அதனால் உங்கள் கை வலிக்குமா? வலிக்காது. அதே பஞ்சு தலைகாணியில் நீங்கள் நிறைய தண்ணீரை ஊற்றி குத்தி பாருங்கள். உங்கள் கை வலிக்கும்.
தண்ணீர் நிரப்பிய பஞ்சை போல். உங்கள் கால் சதைகள் இந்த யோகாவை செய்ய, செய்ய இறுகி வலிமை பெரும். நமது கால் முட்டும் நன்றாக வலிமை அடையும். மேலும் தோள்பட்டையில் உள்ள இறுக்கம் நீங்கும். நம்முடைய முதுகு தண்டு வடம். மற்றும் இடுப்பு போல் நமது உடலினில் அதிக சதை உள்ள பகுதிகளுக்கு இந்த உட்கட்டாசனா ரொம்பவும் நல்லது. இந்த யோகாவால் மார்பு கூடு பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த யோகா குணமாக்கும் வலிகள்- மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி முதலான வலிகள்.
ஆனால் முதன்முறை நீங்கள் இந்த யோகாவை செய்யும் பொழுது உங்கள் உடல் லேசாக வலிக்கலாம்.
No Pain, No Gain.
குணமாக்கும் நோய்கள்- சக்கரை நோய், ரத்த கொதிப்பு, மார்பகம், இதையம் சம்பந்தப்பட்ட நோய்கள். மற்றும் யானைக்கால்.
முதல்முறை செய்பவர்களின் கவனத்திற்கு- நீங்கள் ஜிம் சென்று உடற் பயிற்ச்சி செய்தவர் என்றால். உங்கள் வயிற்றினிலே உள்ள கொழுப்பை குறைக்க என்றே ஜிம்மில் ஒரு பெல்ட் இருக்கும். அதை போட்டால் உங்கள் வயிறு எப்படி குலுங்குமோ. அதைப்போல். நீங்கள் இந்த உட்கட்டாசனாவை செய்யும் பொழுது உங்கள் வயிறு மட்டும் அல்ல. உங்கள் தொடையும் ஆடும். நமது தொடையை ஆட வைக்கும் கருவி MGM, கிஷ்கிந்தா போன்ற தீம் பார்க்களில் கூட இல்லை. இந்த ஒரு யோகாவால் மட்டுமே தொடையை ஆட வைக்க முடியும். முதல்முறை செய்பவர்கள், உடல் மிக பருமனானவர்கள், பலவீனமானவர்கள் இதை 30 வினாடிகள் செய்தாலே போதும். 30 வினாடிகள் கூட உங்களால் செய்ய முடியவில்லை என்றால். ஒரு 15 விநாடிகள் செய்யுங்கள். 15 வினாடிகளாக ஒரு 3 செட் செய்யுங்கள்.
முதல்முறையாக நீங்கள் இந்த யோகா செய்யும் பொழுது. உங்கள் வயிறு, தொடை அதிகமாக ஆடும். மேலும் முதல்முறையாக இதை சேர்ந்தாப்பல ஒரு நிமிடம் செய்தாலே. . 4 கிலோ மீட்டர் நடந்தால் எரியும் கலோரி உங்கள் உடலில் வெறும் ஒரே நிமிடத்தில் எரியும். பின் நீங்கள் இந்த யோகாவை செய்து நன்கு பழக்கப்பட்ட பின். உங்கள் வயிறோ, தொடையோ, உடலோ பெரிதாக ஆடாது. இந்த யோகா நன்றாக செய்து பழக்கப்பட்டவர்கள். தொடர்ந்து 10 நிமிடங்கள் இதை செய்தாலும். 8 கிலோ மீட்டர் நீங்கள் நடந்தால் உங்கள் உடலில் எவ்ளவு கலோரி எரியுமோ. அவ்ளவு கலோரி தான் எரியும்.
இந்த யோகாவை நீங்கள் செய்ய, செய்ய அதனால் உங்கள் உடலில் உள்ள அணைத்து சதை பகுதிகள், எலும்பு பகுதிகள். மற்றும் கால், கால் முட்டு, கை மணிக்கட்டு, மார்பகம் நன்கு பலம் பெறும். சிரசாசனம் போன்ற கடுமையான யோக்காக்களை செய்யும் உடல் வலிமை இந்த யோகாவால் தான் முழுமையாக கிடைக்கும்.
இந்த யோகாவை செய்யும் பொழுது. இந்த யோகா என்று அல்ல. எந்த யோகாவையுமே வெறும் தரையில் செய்ய கூடாது. பாய், ஜமக்காளம் என ஏதேனும் ஒரு விரிப்பின் மீது தான் செய்ய வேண்டும், உட்கட்டாசனம் செய்யும் பொழுது மூச்சை மெதுவாக இழுத்து விடுங்கள். சிலர் உட்கட்டாசனம் செய்யும் பொழுது. பின்காலை தூக்கி செய்வார்கள். அவ்வாறு செய்ய இது ஒன்றும் ஸ்ப்ரிங் வாக் அல்ல. நம்முடைய காலின் அடிப்பகுதி முழுமையாக தரையில் பட வேண்டும்.
அணைத்து யோகாக்களையும் செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு யோகாவை மட்டும் தினமும் செய்தாலே போதும். நீங்கள் உங்கள் வீட்டில் டிவி பார்க்கும் பொழுது. பெட்டின் மீதோ, சோபாவின் மீதோ பத்மாசனத்தில் அமர்ந்தவாறே டிவி பாருங்கள். அல்லது சுகாசனத்திலாவது. அதாவது சப்பலாங்கால் போட்டு அமருங்கள். அவ்வாறு நீங்கள் சுகாசனத்தில் அமர, அமர அதனால் உங்கள் உடல் ஆரோக்யமும் சுகம் அடையும். இன்று பலருக்கு நோய் வர முக்கிய காரணம். இந்த டைனிங் டேபிள் கலாச்சாரத்தால் நாம் தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து சாப்பிடும் ஒன்றையே மறந்து விட்டது தான்.
தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நீரிழிவு:
சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றினை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம்.
இரத்த ஓட்டம்:
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
பசியின்மை:
உங்களுக்கு சில நாட்களாக சரியாக பசி எடுப்பதில்லையா? அப்படியெனில் காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உங்களுக்கு பசியுணர்வு அதிகரிக்கும்.
தலைவலி:
நீங்கள் ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுபவராயின், சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
சளி:
சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும். அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
பல் வலி:
பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
குமட்டல்:
இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.
செரிமானம்:
இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.
🍃 கறிவேப்பிலை 🍃
🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்
♻ இதில் இருப்பவை :-
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
🍃 கொழுப்புக்கள் கரையும் :
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
🍃 இரத்த சோகை :
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
🍃 சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
🍃 இதய நோய் :
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
🍃 செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
🍃 சளித் தேக்கம் :
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
🍃 கல்லீரல் பாதிப்பு :
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
👫 👬 👭 👯 குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
📱 📲 📩 📨 📥 📤
பகிர்வோம்...
💞 இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள் 🌹🌹🌹
***********************************************
இயற்கை மருத்துவம்
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"
2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".
3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"
10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"
11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"
12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"
14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"
16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"
17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"
18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"
20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"
25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��
�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓
�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில �� பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..
�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��
❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
உங்கள் அன்பு நன்பன் அ.ஜான்சன்🙏🏻🤔
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
நாட்டு கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
செய்முறை :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.
தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள்
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
குறிப்பு:
5 மாதம் கெடாது.
1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.
2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.
குறிப்பு : காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...
பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...
🎋🌾🍂🍃☘🍁☘🍃🍂🌾🎋
****************