குட்டி கதை
____
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.
அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு..
அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்காரரை அழைத்து...
ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.
புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...
காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.
அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர்
அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.
நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.
அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்
சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.
அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.
அப்போது நல்ல மழை.⛈
பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...
ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.
அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.
பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.
அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..
ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..
[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]___________
ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது
வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...
(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)--------------------------------------------------------------
மனைவி என்பவள்
சிந்தனை சிறுகதை....
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,
அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது...
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.
கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,, சோகமே உருவாகிவிட்டான்.
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.
ஒருநாள் அளவளாவி இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய், இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?"
விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான் "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி மனசுக்கு என்னவோ போல இருக்கு,
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள் கலங்காதீக, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும" என்றாள்.
மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு
கடையில் தீ விபத்து!
அத்தனை மூலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.
மனைவி வந்தாள், கண்ணீர் துடைத்தாள்.
"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்டி இடிந்து உட்கார... விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும்
வாழ்வில் ஒளி தெரிந்தது.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்...
*நல்ல மனையாள் அமைந்தால் போதும், உலகையே வெல்லலாம்..
என்னை மாற்றிய கதை !!!!
கடவுள் யாரையும் கைவிடுவதில்ல
ஒரு நாள் நான் முடிவு செய்தேன்
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…
ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.
அப்போது…
கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…
“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”
“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.
“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.
அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.
ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.
இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.
“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.
ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.
அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.
ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.
“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.
பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.
எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.
மேலும் கடவுள் என்னிடம்,
“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,
நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.
மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.
ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.
“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இறுதியாக,
“உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”
நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”
“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.
“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.
அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.
ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.
நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.
ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.
கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை
*********************************
முன்பொரு காலத்தில், ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தாராம்..
.
எப்பொழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன...
.
ஒரு நாள் விபத்தில் அவர் கால் காயமடைந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது...
.
சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதை யை தன் போக்குவரத்திற்கு உபயோக படுத்திக்கொண்டார்..
.
இது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது..
சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்.. .
சில நாட்கள் மேற்கு... வடக்கு...
இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம்...
வழக்கத்துக்கு மாறாகவும் இருந்ததாம்.. ..
.
இதை பார்த்துவந்த பொது மக்கள் சிலர்.. ஒரு நாள் வணிகரை நிப்பாட்டி...
"ஏம்ப்பா.. கொஞ்ச நில்லு.
என்னாதுப்பா இது.. ஒரு நாள் கிழக்கா போற...
ஒரு நாள் மேற்கா.. ஒரு நாள் உடனே திரும்புற..
ஒரு நாள் ரொம்ப நேரமாகியும் காணல...
ஒரு நாள் வேகமா போற...
ஒரு நாள் மெதுவா.. .. ஒன்னும் விளங்கலயே... என்னாச்சு... "
.
" முன்ன மாதிரி இல்லங்க ...
இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிறது....
கட்டாயத்துல இருக்கேன்...
நான் போ சொல்ற இடத்துக்கெல்லாம் இதை போக சொன்னேன்...
நான் சொல்ற மாதிரி போ சொன்னேன்... ஆனா இது கேட்கல... "
.
" அப்ப என்ன பண்ண? "
.
" அதுக்காக விட்டுட முடியாதுங்களே.
நமக்கு வேலையாகணும்...
அதே சமயத்துல கழுதை கூட லாம் மல்லுக்கட்ட முடியாது...
ஏன்னா அது கழுதை..
அதுக்கு சொன்னாலும் வெளங்காது.. .
.
அதனால... நான் கொஞ்சம் மாறிகிட்டேன்....
அது கிழக்கே போனா, நான் அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன்..
மேற்கே போனா அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன் ...
அது வேகமா போனாலும் பழகி கிட்டேன்...
.
கழுதைக்கும் இப்ப பிரச்சினை இல்ல..
நமக்கும் இப்ப பிரச்சினை இல்ல....
வாழ்க்கை நிம்மதியா போகுது "
....
இதே போல நம் வாழ்க்கை யும் நிம்மதியாக போக வேண்டுமானால்...
.
சில பல கழுதைகளுடன் அட்ஜஸ்ட் செய்ய பழகிக்க வேண்டும்....
வாழ்க்கையில், இப்படி நிறைய கழுதைகளுடன் அன்றாட பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
அதற்காக கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது...
.
அவிங்களுக்கு சொன்னாலும் புரியாது,
புரியவைப்பதும் கஷ்டம்...
.
அதனால் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால், நம்ப வேலையும் நடக்கும்..
வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்!!!
.
இது ஓர் அறிவுரை என.நினைத்தால் போதும்
*********************************
வாழ்க்கையின்
எளிதான தத்துவம்:
நீங்க தான் எல்லாமே ன்னு
நினைச்சுக்காதீங்க...
நீங்க எதுவுமே இல்லன்னும்
நினைச்சுக்காதீங்க..
நானும் ஏதோ ஒண்ணு..
என்னாலையும் எதுவும் முடியும்..
முயற்சி பண்ணினால் ன்னு
நினையுங்க..
எதுவும் சாத்தியமாகும்.
இனிய காலைப்பொழுது 😊😊
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம்
எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு..
நீங்கள் கடத்தல்
வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்
குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம்
வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய
நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம்
அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்
செல்லலாம் என்று எண்ணுகிறேன்..
ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்
தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான்.
அன்பே.. குடும்பச்
செலவுக்காக
வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.
அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப்
புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப்
போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.
அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர்
பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம்
கொல்லைப் புறத்தைத்
தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..
இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக்
கட்டிகள் எதுவும் இல்லையே..?
கைதி திரும்பவும்
மனைவிக்கு எழுதினான்.
அன்பே.. அவர்கள்
காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய
கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்
தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில்
தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை..
இப்போ து நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
criminal is always criminal😎
படித்ததில் பிடித்தது
****************************
சித்ரகுப்தன்:- பிரபு! என்ன இது அநியாயம்... அக்கிரமம்... ஓரவஞ்சனை?
எமதர்மன்:- பொறுமை... பொறுமை! அப்படி என்ன அநியாயம் நடந்து விட்டது சித்ரகுப்தா...?
சித்ரகுப்தன்:- சமீபகாலமாக இந்தியா எனும் நாட்டிலிருந்து பிடித்து வரும் உயிர்களில், குறிப்பாக தமிழ்நாடு எனும் இடத்திலிருந்து பறித்து வரும் உயிர்களை மட்டும் வரிசையில் நிற்க வைத்து,கேள்வி கணக்குகள், விசாரணைகள் எதுவுமே நடத்தாமல், அப்படியே சொர்க்க வாசலுக்கு அனுப்பி வைக்கறீர்களே..., இது அநியாயம் இல்லையா?
எமதர்மன்:- சித்ரகுப்தா! அந்த தமிழர்கள் எல்லாமே கடந்த சில மாதங்களாக, பணத்திற்காக பேங்க்- ATM வாசல், அம்மாவுக்காக அப்பல்லோ வாசல், ஜல்லிக்கட்டுக்காக வாடி வாசல், நைட்ரோ கார்பனுக்காக நெடு வாசல் என பூமியிலேயே சித்ரவதைப்பட்டு, நரகத்தை அனுபவித்துவிட்டு வருகிறார்கள்...! ஆகையால்தான் அந்த உயிர்களுக்கு மட்டும் இனி எந்த சித்ரவதையும் வேண்டாம் என்பதால்தான் நேராக சொர்க்க வாசலுக்கே அனுப்பி விடுகிறேன்!
சித்ரகுப்தன்:-?👹?👹

No comments:
Post a Comment